/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ல.ஜ.க வேட்பாளர் ஜெயக்குமார் வாகனத்தில் தேர்தல் பிரசாரம்
/
ல.ஜ.க வேட்பாளர் ஜெயக்குமார் வாகனத்தில் தேர்தல் பிரசாரம்
ல.ஜ.க வேட்பாளர் ஜெயக்குமார் வாகனத்தில் தேர்தல் பிரசாரம்
ல.ஜ.க வேட்பாளர் ஜெயக்குமார் வாகனத்தில் தேர்தல் பிரசாரம்
ADDED : ஏப் 06, 2026 11:27 PM

வில்லியனுார்: நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் வீதி
வீதியாக வாகனத்தில் சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர், சித்தானந்த நகர், டி.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் வீதி வீதியாக வாகனத்தில் சென்று தர்பூசணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மேலும் அப்பகுதி திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேசும்போது, தொகுதியில் உள்ள மாற்று திறனாளி இளைஞர்கள் சுய தொழில் துவங்க ரூ.2 லட்சம் மூலாதன உதவித்தொகையும், தொகுதியில் முழு நேரமும் இலவசமாக செயல்படும் ஆம்புலன் வசதி ஏற்படுத்தி கொடுப்பேன் என பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது லட்சிய ஜன நாயக கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்., பா.ஜ., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.