தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூனிச்சம்பட்டில் கிணற்றில் விழுந்த குள்ளநரி மீட்பு

 கூனிச்சம்பட்டில் கிணற்றில் விழுந்த குள்ளநரி மீட்பு

 கூனிச்சம்பட்டில் கிணற்றில் விழுந்த குள்ளநரி மீட்பு


ADDED : ஏப் 23, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கூனிச்சம்பட்டு வயல்வெளிக்கு அதிகாலையில் சென்ற பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வினோதமாக சத்தம் வருவதை கண்டு எட்டிப் பார்க்க... அங்கே குள்ளநரி ஒன்று இருப்தை கண்டு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மீட்பு பணியில் முதலில் ஒரு பெரிய வலை மற்றும் கூண்டு கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. நரி லாவகமாகப் பிடிக்கப்பட்டு, கிணற்றுக்கு வெளியே ஏர்லிப்ட் செய்யப்பட்டது. வெளியே வந்த நரிக்கு அடி ஏதும் பட்டிருக்கிறதா என்று வனத்துறை மருத்து குமரன் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. பின் மீட்கப்பட்ட நரி சோர்வாக இருந்தது. தண்ணீர் கொடுத்து, வனத்துறையினர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, நரி வழிதவறி வந்துள்ளது, சிகிச்சை பிறகு காட்டில் விடப்படும் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us