sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்

/

புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்

புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்

புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்


ADDED : அக் 20, 2025 10:36 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் தினமும் 350 டன் குப்பை உற்பத்தியாகின்றன. அவை, குருமாம்பேட் எரு கிடங்கில் கொட்டி மறுசூழற்சி செய்து அகற்றப்படுகின்றது. இருப்பினும் தொடர்ந்து குவியும் பிளாஸ்டிக் குப்பையை அகற்றுவது சவாலாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கும்அச்சுறுதலாக மாறுகின்றது.

இந்நிலையில், நகரப்பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, பைரோலிசிஸ் எண்ணெய் தயாரித்து முற்றிலுமாக பிளாஸ்டிக் குப்பையை அகற்ற அரசு, உள்ளாட்சி துறை வாயிலாக திட்டமிட்டுள்ளது.இதற்காக ரூ.6 கோடி செலவில் சீனாவில் இருந்து கொண்டு வந்துள்ள இரண்டு ராட்சத ரியாக்டர்கள் கொண்ட பைரோலிசிஸ் ஆலையை, குரும்பாபேட்டில் கிரீன் வாரியர் நிறுவனம் மூலம் நிறுவியுள்ளது.

தலா 30 டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை மறுசூழற்சி செய்யும் திறன் கொண்ட, இவ்விரண்டு ரியாக்கடர் மூலம் தினமும் 60 டன் பிளாஸ்டிக் கழிவுகளை பைரோலிசிஸ் எண்ணெய் தயாரிக்க முடியும்.

முதற்கட்டமாக ஒவ்வொரு ரியாக்டருக்கும் 15 டன் பிளாஸ்டிக் குப்பையை செலுத்தி மொத்தம் 30 டன் அளவிற்க மறுசூழற்சி செய்து, அதன் மூலம் தினசரி 6 டன் பைரோலிசிஸ் எண்ணெய் உற்பத்தி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைரோலிசிஸ் எண்ணெய் தயாரிப்பு காற்று அல்லது ஆக்சிஜன் இல்லாத சூழலில், 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் நடக்கும் ஒரு தெர்மல் டிகம்ேபாசிஷன் எனும் வெப்ப வேதிப்பிளவு செயல்முறை ஆகும். இந்த செயல்பாட்டின் போது உயிரிச் சேர்மங்களில் உள்ள நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கிலிகள் உடைந்து, வாயுக்கள், திரவமாக குளிரக்கூடிய நீராவி போன்ற சிறிய மூலக்கூறுகளாக மாறுகின்றன.

உற்பத்தியாகும் பைரோலிசிஸ் எண்ணெய், சிமெண்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த லிட்டர் ரூ.45 முதல் ரூ50 வரை விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பைரோலிசிஸ் எண்ணெய் லிட்டருக்கு ரூ.55க்கு விற்கப்படுகிறது.

எனவே பிற மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் புதுச்சேரியின் பக்கம் பார்வை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய ஆலை மூலம் புதுச்சேரியில் ஆண்டிற்குகுறைந்தது 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்ய முடியும்.இந்த ஆலை அமைக்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல்இந்த ஆலையை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பூஜ்ய இலக்கு....

உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல் கூறுகையில், ஏற்கனவே குருமாம்பேட்டில் குவிந்து கிடந்த 10 லட்சம் டன் குப்பைகளை அகற்றினோம். அடுத்து குப்பைக் கிடங்கில் இனி பிளாஸ்டிக் சேர்வதை தடுக்க இந்த பைரோலிசிஸ் எண்ணெய் தயாரிப்பினை விரைவில் துவங்க உள்ளோம். இனிமேல் பிளாஸ்டிக் நிரந்தரமாக குவிக்கப்படாத இடமாக குப்பை கிடங்கு மாற்றப்படும். புதுச்சேரியில் பூஜ்ய குப்பை என்ற இலக்கை நோக்கிய பயணமாக இதனை துவங்கியுள்ளோம் என்றார்.



பைரோலிசிஸ் எண்ணெய் தயாரிப்பு எப்படி

சேகரிப்பு மற்றும் முன் செயலாக்கம் முதலில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குப்பைகளில் இருந்து சேகரித்து, முன் செயலாக்க பிரிவில் நறுக்கி உலர்த்தப்படும். இதனால் அவை பைரோலிசிஸ் செய்ய உகந்த நிலையில் இருக்கும்.மேலும், இயந்திரங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். பைரோலிசிஸ் செயல் நறுக்கி, உலர்த்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ரியாக்டருக்குள் செலுத்தி, 1000 டிகிரி செல்சியஸ் வரை சூடேற்றப்படும். ஆக்சிஜன் இல்லாத சூழலில் வெப்பத்தால் பொருட்கள் உடைந்து வாயுக்களாகமாறும். குளிர்த்தல் மற்றும் சேகரிப்பு: பைரோலிசிஸ் செயலில் உருவாகும் வாயுக்கள் அடுத்து கண்டென்சருக்குள் அனுப்பப்படும். அங்கு அவை குளிர்ந்து பைரோலிசிஸ் திரவ எண்ணெய்யாக மாற்றப்படுகின்றன. குளிராத வாயுக்கள் இரண்டு நிலையில் சேகரிக்கப்படும். ஒருநிலையில் குளிராத வாயுக்கள்ரியாக்டரின் எரிபொருளாக பயன்படுத்தப்பட உள்ளது. மற்றொரு நிலையில் குளிராத சூடான வாயுக்கள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த மின்சாரம் ஒட்டுமொத்த யூனிட்டிற்கு பயன்படுத்தப்படும். துவக்கத்தில் மொத்த யூனிட்டை இயக்க அரை லிட்டர் டீசல் தேவைப்படும். அதன் பிறகு பிளாஸ்டிக் பொருட்களை மறுசூழற்சி செய்யும்போது கிடைக்கும் வாயுக்களில் இருந்தே ஒட்டுமொத்த ரியாக்டர்களும் இயங்கும்.








      Dinamalar
      Follow us