/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கும் பா.ஜ.,விற்கும் தொடர்பு இல்லை மாநில தலைவர் ராமலிங்கம் 'பளீச்'
/
சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கும் பா.ஜ.,விற்கும் தொடர்பு இல்லை மாநில தலைவர் ராமலிங்கம் 'பளீச்'
சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கும் பா.ஜ.,விற்கும் தொடர்பு இல்லை மாநில தலைவர் ராமலிங்கம் 'பளீச்'
சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கும் பா.ஜ.,விற்கும் தொடர்பு இல்லை மாநில தலைவர் ராமலிங்கம் 'பளீச்'
ADDED : செப் 28, 2025 08:05 AM
புதுச்சேரி : 'சுயேச்சை எம்.எல்.ஏ.,க் களுக்கும், பா.ஜ.,விற்கும் எந்த தொடர்பும் இல்லை' என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர்,கூறியதாவது:
பா.ஜ., ஒரு போதும் இரண்டாம் தர அரசியல் செய்ய விரும்பாது. எப்போதும் கூட்டணியுடன் தான் பயணிப்போம். கூட்டணி தர்மத்தை மீறி நாங்கள் செயல்படுவது கிடையாது. அரசுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் ஆதரவு கொடுத்தனர். அது அவர்களது நிலைபாடு.
அவர்கள் தற்போது பா.ஜ.,விற்கு ஆதரவாக இல்லை. எந்த நிகழ்ச்சிக்கும் அவர்களை நாங்கள் அழைப்பதும் இல்லை.
பா.ஜ.,வுக்கு, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான அங்காளன், சிவசங்கர் ஆகியோருடன் எந்தவித தொடர்பும் கிடையாது. பா.ஜ., பி-டீம் என்பதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். தேசிய தலைமை என்.ஆர்.காங்., அ.தி.மு.க., உடன் மட்டுமே கூட்டணி என கூறியுள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுடன் யாரேனும் தொடர்பில் இருந்தால் கூட, அவர்கள் பா.ஜ.,வால் விலக்கி வைக்கப்படுவர்.
அமைச்சர் ஜான்குமார் நடவடிக்கைகளை தலைமை வரை கொண்டு சென்றுள்ளோம். அரசுக்கு எதிராக இலை மறைவு, காய் மறைவாக சில வேலைகள் நடக்கிறது என்பதை தலைமைக்கு தெரிவித்துள்ளோம்.
கடந்த தேர்தலில் எம்.பி., ஒருவரை தேர்வு செய்து அனுப்பினோம். அவரால் புதுச்சேரிக்கு எந்தவித பெரிய நலத்திட்டங்களை கொண்டு வர முடியவில்லை.
தற்போது கூட நடிகர்கள் கட்சியை துவங்கி வருகின்றனர். அவர்களால் என்ன செய்ய முடியும். கவர்ச்சியை மட்டும் தான் ஏற்படுத்த முடியும்.
எதுவும் சம்மந்தம் இல்லாத ஒருவரை அழைத்து வந்து மாநாடு நடத்தி, மனு கொடுப்பது போன்ற நிகழ்வு மிகவும் மோசமான செயல். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மக்கள் கவர்ச்சியை நம்பாமல், 2016ல் யார் ஆட்சியில் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்று சிந்திக்க வேண்டும்' என்றார்.