நீண்ட நாள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு: உழவர்கரை என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி
நீண்ட நாள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு: உழவர்கரை என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 01, 2026 07:53 PM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் ஜக்கு சின்னத்தில் ஓட்டு சேகரித்த என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமிக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
உழவர்கரை தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி நேற்று காலை சாலைத்தெரு, பசும்பொன் நகர், குண்டுசாலை, அணைக்கரை வீதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி ஆட்சியின், திட்டங்களை எடுத்து கூறி வீடு வீடாக துண்டு பிரசுரம் கொடுத்து ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது பொதமக்கள், மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கும் தொகுதியில் உள்ள அனைத்து நீண்ட நாள் பிரச்னைகளுக்கும் நான் வெற்றி பெற்றதும் உடனடியாக தீர்வு காண்பேன் எனக் கூறி ஓட்டு சேரித்தார்.
பிரசாரத்தில், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான பா.ஜ., ல.ஜ.க., அ.தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
