/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்களுக்கான சுகாதார திருவிழா கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
/
பெண்களுக்கான சுகாதார திருவிழா கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
பெண்களுக்கான சுகாதார திருவிழா கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
பெண்களுக்கான சுகாதார திருவிழா கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
ADDED : செப் 18, 2025 03:05 AM

புதுச்சேரி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் 'ஆரோக்கியமான பெண்களே குடும்பத்தின் பலம்' என்ற தலைப்பில் பெண்களுக்கான சுகாதாரத் திருவிழா நேற்று நடந்தது.
கம்பன் கலையரங்கத்தில் நடந்த விழாவை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., தலைமை செயலர் சரத் சவுகான், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை செயலர் குலாம் முஸ்தபா, அரசு செயலர் ஜெயந்தகுமார் ரே, இயக்குநர் செவ்வேள், திட்ட இயக்குநர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
வரும் 2ம் தேதி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையங்களில் காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பெண்களுக்கான சுகாதார திருவிழா நடக்கிறது.
முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொது சுகாதார சேவைகள், நீரிழிவு, காசநோய், ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய், கண், மனநலம், இருதய பரிசோதனை மற்றும் ஆலோசனைகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி, உடல் பருமன் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், ஆயுஷ் மற்றும் உடல்நல பயிற்சி விளக்கங்களும் வழங்கப்பட உள்ளன. 70 வயது மேற்பட்டவர்கள், சிகப்பு அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு பதிவு, சுகாதார அடையாள அட்டை வழங்கல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.