ADDED : மே 13, 2026 04:44 AM

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி சண்முகாபுரத்தில் தடையற்ற மின்வினியோகம் செய்வது தொடர்பாக சட்டசபை தேர்தலில் கதிர்காமம் தொகுதியில் வெற்றி பெற்ற அழகானந்தம் மின்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி, கதிர்காமம் தொகுதி சண்முகபுரம் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு முதல் குறைந்த மின்னழுத்த வினியோகம் இருந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தம் செல்வதால் மின் சாதனங்கள் பழுதடைந்து, பொதுமக்கள் பாதித்தனர்.
இப்பிரச்னை தொடர்பாக தொகுதியில் வெற்றி பெற்ற அழகு (எ)அழகானந்தத்திடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்க வைத்தனர். இதையடுத்து நேற்று மின்துறை இளநிலை பொறியாளர் கந்தப்பன் உள்ளிட்ட மின்துறை ஊழியர்களை அழைத்து அழகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு என்பதை மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே சண்முகபுரத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க மூன்று இடங்களை தேர்வு செய்தனர். எந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கலாம் என்பது குறித்து மின் துறை அதிகாரிகளை நேரில் அழைத்துச் சென்று அழகானந்தம் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சண்முகாபுரம் பகுதி மக்கள் உடன் இருந்தனர்.
