ADDED : மே 23, 2026 04:14 AM
புதுச்சேரி: மொபைல்போன் சர்வீஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில், மொபைல் போன் சர்வீஸ் கடை உள்ளது. கடையின் உரிமையாளர் பூபதி நேற்று இரவு 9 மணியளவில் கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றார். அப்போது கடையில் திடீரென்று புகை வெளியானது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் கடை உரிமையாளர், தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து கடையை திறந்து சுவிட்ச் போர்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ குறித்து விசாரித்தனர். அதில் கடையில் மொபைல் போன் ஜார்ஜ் போடும் சுவிட்ச் போர்டை அணைக்காமல் சென்றதால், அது திடீரென்று வெடித்து மின்சார ஒயர் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.
இத னால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
