/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
45 அடி சாலையில் மீண்டும் ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளத்தால் அச்சம்
/
45 அடி சாலையில் மீண்டும் ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளத்தால் அச்சம்
45 அடி சாலையில் மீண்டும் ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளத்தால் அச்சம்
45 அடி சாலையில் மீண்டும் ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளத்தால் அச்சம்
ADDED : செப் 16, 2025 06:37 AM

புதுச்சேரி: வள்ளலார் சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் மீண்டும் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி, வள்ளலார் சாலை 45 அடி சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் இச்சாலையின் நடுவே கடந்த ஜூலை 9ம் தேதி திடீரென 12 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், சாலையின் நடுவே செல்லும் பாதாள சாக்கடை உள்வாங்கியதால், பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடையை சரி செய்தவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று மீண்டும் அதே இடத்தில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைப்பில் மூழ்கியுள்ளனர்.
இதற்கிடையே, போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டு வருவது, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.