UPDATED : மே 08, 2026 06:07 PM
ADDED : மே 08, 2026 05:42 PM

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபருக்கு... புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு சிறுமி குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து வாய்க்காலில் வீசிய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வாலிபருக்கு துாக்கு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 5ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிய போது மாயமானார். மு த்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில், அதே மாதம் 5ம் தேதி சிறுமி வீட்டில் இருந்து 100 மீட்டர் துாரத்தில், கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட் ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜிப்ம ரில் நடந்த பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. அதன்பேரில், சிறுமி மாயமான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும், கடத்தல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், குற்றத்திற்கான சாட்சிகளை மறைத்தல், போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
கொடூர கொலை விசாரணையில், சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிய சிறுமியை, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த முனுசாமி மகன் காக்கா (எ) கருணா (எ) கருணாஸ்,19; ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து விளையாடலாம் எனக் கூறி , அதே பகுதியில் உள்ள வீட்டின் மாடி அறைக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை, வீட்டின் மற்றொரு பகுதியில் தங்கியிருந்த விவேகானந்தன்,59; பார்த்துவிட்டு, கருணாவை மிரட்டி வெளியே அனுப்பி விட்டு, அவர் பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி சுய நினைவை இழந்துள்ளார்.
சுயநினைவு திரும்பிய சிறுமி, வலியால் அலறியனார். உடன், கருணா, விவேகானந்தன் இருவரும் சிறுமியை அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவும், தங்கள் குற்றத்தை மறைக்கவும் சிறுமியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்து, கை, கால்களை கயிற்றால் கட்டி வேட்டியில் சுற்றி, வீட்டின் பின்னால் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் வீசியது ம், சிறுமியின் உடல் கடலுக்கு அடித்து செல்லப்பட்டுவிடும் என அவர்கள் கருதியது தெரிய வந்தது.
இருவர் கைது கருணா, விவேகானந்தன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, சிறுமி கடத்தப்பட்ட இடத்தையும், சிறுமியை விவேகானந்தன் அறைக்கு அழைத்து சென்ற வழியையும், அங்கி சிறுமியிலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறையையும், சிறுமியின் உடலையும், அவரது செருப்புகளை வீசி எறிந்த இடத்தை காட்டினர்.
குற்றவாளிகள், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறையில் இருந்த முக்கிய தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். மேலும், சிறுமி உடலுடன் வீசப்பட்ட அவரது செருப்புகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்ந்து முத்தியால்பேட்டை போலீசார், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் 560 பக்க குற்றப்பத்திரிகையை அதே ஆண்டு மே 2ம் தேதி தாக்கல் செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன், அதே ஆண்டு செப்., 16ம் தேதி சிறை கழிவறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட தால், அவரை வழக்கில் இருந்து நீக்கியதுடன், வழக்கில் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை பிரிவும் நீக்கப்பட்டது.
விசாரணை தொடர்ந்து, கருணா மீதான வழக்கின் விசாரணை அதே ஆண்டு நவம்பர் மாதம், நீதிபதி சுமதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன், சிறுமி தரப்பில் வழக்கறிஞர் பிரவின் ஆஜராகினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கருணா தரப்பில் ஆஜராக புதுச்சேரி வழக்கறிஞர்கள் மறுத்துவி டவே, இலவச சட்ட உதவி மையம் மூலம் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானர்.
குற்றவாளி உறுதி கடந்த ஒன்றரை ஆண்டாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் 54 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. உயிர் மாதிரி உள்ளிட்ட 81 ஆவண சாட்சியங்கள், 37 சான்று பொருட்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் 17 வரை, இருதரப்பு வழக்கறிஞர்களின் இறுதிகட்ட வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, கடந்த 30ம் தேதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கருணா, பாலியல் நோக்கில் சிறுமியை கடத் தி, அடைத்து வைத்தல், கொலை செய்தல் , தடயம் -ஆதாரங்களை மறைத்தல் மற்றும் போக்சோ பிரிவு 6ன் கீழ் கருணா குற்றவாளி என அறிவித்தார். மேலும், தண்டனை விபரங்கள் 5ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
அறிக்கை கேட்பு கடந்த 5ம் தேதி நீதிமன்றம் கூடியபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி , குற்றத்தின் கொடூரத்தை உணர்ந்து, குற்றவாளிக்கு அதிகப்பட்சமான மரண தண்டனை வழங்க வேண் டி, எழுத்து பூர்வமான வாதத்தை முன் வைத்தார். அதனையேற்ற நீதிபதி சுமதி, குற்றவாளி யின் குடும்ப பின்னணி மற்றும் அவர் மீதான வழக்கு விபரம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசின் சமூக நலத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நேற்று முன்தினம் , சமூக நலத்துறை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் பேரில் இரு தரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சுமதி, வழக்கின் தீர்ப்பை 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
துாக்கு தண்டனை அதனையொட்டி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாவை, போலீசார் நேற்று காலை 10.05 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 11:20 மணிக்கு நீதிபதி சுமதி, வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காக்கா (எ) கருணா (எ) கருணாசிற்கு கொலை மற்றும் போக்சோ சட்டப்பிரிவு 6ன் கீழ் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக புதுச்சேரி அரசு ரூ.10 லட்சம் வழங்கவும், வழக்கில் மேல்முறையீடு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
தீர்ப்பை கேட்ட குற்றவாளி கருணா கதறி அழுதார். தொடர்ந்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மூன்றாவது துாக்கு தண்டனை புதுச்சேரியில் கடந்த 2000ல் பார்வதிஷா கொலை வழக்கில் குற்றவாளி கமல்ஷாவிற்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையிட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சின்னகாலாப்பட்டில் கடந்த 2013ம் ஆண்டு இன்டர் நெட் சென்டரில் பெண் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் செண்பககுமரன், கும்மி குமரன் ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார். தற்போது, நாட்டையே உலுக்கிய முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதி கிடைத்துள்ளது தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறுகையில், 'சிறுமி கொடூர கொலை வழக்கில் புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் குற்றவாளிக்கு துாக்குத் தண்டனை விதித்துள்ளது. சிறுமி குடும்பத்திற்கு நீதி கிடைத்துள்ளது. இவ்ழக்கில் மேல்முறையீடு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் உண்டு. போக்சோ நீதிமன்றம் விதித்த துாக்குத்தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். அதனால், தீர்ப்பு இரு நாட்களில் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்' என்றார்.

