பணி நிரந்தரம் செய்ய கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் ஊர்வலம்
பணி நிரந்தரம் செய்ய கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் ஊர்வலம்
ADDED : பிப் 12, 2026 04:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பணி நிரந்தம் செய்ய கோரி, ஒப்பந்த ஆசிரியர்கள் ஊர்வலம் சென்றனர்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ், பணி நியமன விதிகளை பின்பற்றி, கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிகா ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி, அரசு ஆசிரியர் சங்ககளின் கூட்டமைப்பு சார்பில், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 10:30 மணியளவில் ஒப்பந்த ஆசிரியர்கள், அண்ணா சிலையில் இருந்து மக்கள் மாளிகையை நோக்கி ஊர்வலமாக அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்றனர். அப்போது, பெரியக்கடை போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். அங்கு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
