தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

 தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

 தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : மே 29, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களுக்கான கணக்குகளை சமர்ப்பிப்பதற்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

புதுச்சேரியில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வேட்பாளர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்களது தேர்தல் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்படி, வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்களுக்கான கணக்குகளை சமர்ப்பிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், வேட்பாளர்களின் தேர்தல் கணக்கு முகவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அதிகாரி, முகவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேங்களுக்கு பதில் அளித்து, வேட்பாளர்கள் தங்கள் வரவு செலவு கணக்கினை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

மேலும், வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் வரவு செலவு கணக்குகளை செலவின பார்வையாளர்கள் பார்வை ஈடுவர் என, தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us