ADDED : ஜூன் 15, 2026 10:32 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, காந்தி வீதி பெத்தி செமினார் பள்ளியில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.
பள்ளியின் முதல்வர் குழந்தைசாமி தலைமை தாங்கி, ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். முகாமில் அரசு பொது மருத்துவமனையின் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி முன்னிலையில் செவிலியர்கள் ரத்த தானம் பெற்றனர்.
இதில், பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
