ADDED : ஜூன் 11, 2026 07:53 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மொபைல் போன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி, லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, மொபைல் போன் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி 17ம் தேதி துவங்குகிறது. மேலும், விபரங்கள் அறிய 8870497520, 0413 2246500 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள் ளது.
