ADDED : செப் 27, 2025 12:02 AM
பாகூர்: அங்கன்வாடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணாபுரம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் 50; எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலர். இவரது மனைவி சங்கரிதேவி, 39. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சங்கரிதேவி உச்சிமேடு பகுதியில் உள்ள அங்கன்வாடி உதவியாளர். ராமதாஸ் கடந்த 23ம் தேதி விடுமுறையில் வீடு திரும்பினார். மறுநாள் இரவு ராமதாஸ் மது குடித்து வீட்டிற்கு வந்தார்.
அதனை சங்கரி தேவி கண்டித்தார். 25ம் தேதி காலை ராமதாஸ் மீண்டும் மது குடிக்க செல்வதாக கூறினார். அதற்கு, சங்கரிதேவி குடிக்க செல்லக்கூடாது, மீண்டும் குடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என, கூறியுள்ளார்.
ஆனாலும், ராமதாஸ் வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது, ஸ்டோர் ரூமில், மின் விசிறியில், சங்கரிதேடி துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு, பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.