/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவராத்திரி பெருவிழாவில் அம்மன் மயூர வாகனத்தில் உலா
/
நவராத்திரி பெருவிழாவில் அம்மன் மயூர வாகனத்தில் உலா
நவராத்திரி பெருவிழாவில் அம்மன் மயூர வாகனத்தில் உலா
நவராத்திரி பெருவிழாவில் அம்மன் மயூர வாகனத்தில் உலா
ADDED : செப் 28, 2025 08:08 AM

புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடை பெற்று வரும் நவராத்திரி பூஜையில், அம்மன் நேற்று மயூர வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.
புதுச்சேரி தர்ம சம் ரக் ஷண சமிதி சார்பில், லாஸ்பேட்டை, இ.சி. ஆர்., சங்கர் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும், சத சண்டி ஹோமத்தில், ஆறாம் நாளான நேற்று, ஸ்கந்த மதா வாக மயூர வாகனத்தில் அம்மன் வலம் வந்து காட்சியளித்தார்.
முன்னதாக வேத நாதத்துடன் துவங்கிய பூஜையில் கோ பூஜை, அஸ்வ பூஜை, நவாவரண பூஜை, அபிஷேகம், தீபாராதனை என நீடித்து வழக்கமாக நடைபெறும் ஹோம திரவ்ய சமர்ப்பணம், வஸ்திரம், திருமாங்கல்ய அர்ப்பணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாலை சங்கர் வித்யாலயா பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சங்கரி தேவி சொற்பொழிவு நடந்தது.