/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செயற்கை நுண்ணறிவு வருகையால் வருவாய் இழந்த விளம்பர நிறுவனங்கள்
/
செயற்கை நுண்ணறிவு வருகையால் வருவாய் இழந்த விளம்பர நிறுவனங்கள்
செயற்கை நுண்ணறிவு வருகையால் வருவாய் இழந்த விளம்பர நிறுவனங்கள்
செயற்கை நுண்ணறிவு வருகையால் வருவாய் இழந்த விளம்பர நிறுவனங்கள்
ADDED : அக் 20, 2025 10:28 PM

புதுச்சேரி: ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணுறிவுத்துறை, பலரின் வேலையை பறித்து வருவதாக பலரும் புலம்பி வருகின்றனர். தற்போது அந்த பட்டியலில், விளம்பர மாடல்கள், இயக்குனர்களும் சேர்ந்துள்ளனர்.
வழக்கமாக தீபாவளி, பொங்கல், கிறிதுஸ்மஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் சாட்டிலைட் துவங்கி உள்ளூர் லோக்கல் சேனல் 'டிவி'க்களில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்கள் வரிசை கட்டி வெளியாகும். இதற்காக பல லட்சம் ரூபாயை விளம்பரம் வெளியிடும் வணிக நிறுவனங்கள் செலவிடும்.
இந்த விளம்பரங்களை எடுத்து தருவதினால் விளம்பர இயக்குனர்கள், அதில் நடிக்கும் நடிகை, நடிகர்கள், மாடல்கள், ஒளிப்பதிவாளர்கள், அரங்கமைப்பாளர்கள் என பலருக்கு வருவாய் ஈட்டும் தொழில் வாய்ப்பை வழங்கி வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுச்சேரியில் உள்ள பிரபலமான பெரிய ஜவுளி நிறுவனங்கள் தொடங்கி, சிறிய நகைக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் வரை வெளியிட்டுள்ள வீடியோ விளம்பரங்கள் முழுக்க, முழுக்க செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு பெரிய துணி கடை விளம்பரம் மனித உழைப்பில் எடுக்க 5 லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், அதே விளம்பர ஏ.ஐ., மூலம் எடுக்க வெறும் ரூ.50 ஆயிரம் மட்டும் தான் செலவாகிறது. அதனால் தான் நிறுவன உரிமையாளர்கள் செலவினை குறைக்கும் வகையில் ஏ.ஐ., பக்கம் சென்று விட்டதாக வருத்தத்துடன் விளம்பரங்களை உருவாக்குபவர்கள் கூறுகின்றனார்.
ஏஐ மூலம் எடுக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியில் ஒளிபரப்பாகி வரும் விளம்பரங்களில் முழுக்க செயற்கை தனத்தனமாக உள்ளதால், இது பார்வையாளர்களை கவர முடியாமல் தனித்து நிற்கிறது என்பது வேறுகதை.