5 பேரை கடித்து குதறிய வெறி நாய்: வில்லியனுார் அருகே பரபரப்பு
5 பேரை கடித்து குதறிய வெறி நாய்: வில்லியனுார் அருகே பரபரப்பு
UPDATED : ஜூன் 14, 2026 07:42 PM
ADDED : ஜூன் 14, 2026 07:32 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே சாலையில் சென்றவர்களை அடுத்தடுத்து வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார் தில்லை நகர், கணுவாப்பேட்டை, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் தெரு நெய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்களும் அச்சமடைகின்றனர்.
இந்நிலையில் ஒதியம்பட்டு மெயின்ரோடு கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள கரையான்பேட் அன்னை நகரில், காலை 8:30 மணியளவில் சாலையில் நடந்து சென்ற ஐந்துக்கும் மேற்பட்டோரை அவ்வழியாக வந்த வெறிநாய் ஒன்று அடுத்தடுத்து கடித்து குதறியது.
பாதிக்கப்பட்டோரில் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் திரண்டு வந்து அங்கிருந்த வெறிநாயை விரட்டியடித்து காயமடைந்தவர்கள் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
வில்லியனுார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
