மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 38 புகார் மனுக்களுக்கு தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 38 புகார் மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2026 02:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டே ஷன்களில் நேற்று நடந்த மக்கள் மன்றத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 65 புகார் மனுக்களில் 38 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் மன்றத்தில், சைபர் கிரைம் தொடர்பான குறைகளை எஸ்.பி., ராகவ் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி.,க் கள் திவ்யா, பக்தவச்சலம் போக்குவரத்து தொடர்பான குறைகளை கேட்டறிந்தனர். ஒதியன்சாலை போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., சுருதி, டி.நகர்., போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., வம்சிதர ரெட்டி குறைகளை கேட்டறிந்தனர்.
அதே போன்று, தவளக்குப்பம், திருக்கனுார், காரைக்கால் டவுன் போலீஸ் ஸ்டேஷன், மாகி, ஏனாம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று காலை 11:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நடந்தது. அதில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு பிரச்னைகள் தொடர்பான 65 புகார் மனுக்கள் பெறப்பட்டது. 38 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக தீர்வு காணப்பட்டது.
