ADDED : ஜூன் 18, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கழும்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் 25, என்பவர் சின்ன காலப்பட்டு சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை சந்திப்பு புகுதியில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய மணிகண்டன், 40; வானுார் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், 46, ரெட்டியார்பாளையம் பகுதியில் மது போதையில் ஆபாசமாக பேசிய குமரகுருபள்ளம் தமிழ், 32, ஆகியோரை அந்தந்த போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
