ADDED : ஜூன் 04, 2026 07:42 PM
புதுச்சேரி: காட்டேரிகுப்பம் போலீஸ் சார்பில் தனியார் கம்பெனியில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெண்கள் தங்கள் பணிபுரியும் இடங்கள், குடும்பங்கள், கல்வி பயிலும் நிறுவனங்கள் மற்றும் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன சட்டங்கள் உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் பாதுகாப்புக்காக போலீஸ் சார்பில், உருவாக்கப்பட்டுள்ள அவசர கால மொபைல் செயலிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
