ADDED : ஜூன் 21, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை, நெசவாளர் நகர், கலைமகள் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம், 52; ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி, 50. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
லோகேஸ்வரிக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து, சளி, இருமல் இருந்து வந்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு லோகேஸ்வரிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து லோகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
