ADDED : மே 31, 2026 11:51 PM
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதியை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
தொடர்ந்து, நேற்று (31ம் தேதி) திரவுபதியம்மன், அர்ஜூனன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 9:00 மணிக்கு முத்து பல்லக்கில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நாளை (2ம் தேதி) மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.
