தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூரில் பாத்திரக்கடை உரிமையாளர் தற்கொலை

பாகூரில் பாத்திரக்கடை உரிமையாளர் தற்கொலை

பாகூரில் பாத்திரக்கடை உரிமையாளர் தற்கொலை


ADDED : ஜூன் 06, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர், காந்தி நகரை சேர்ந்தவர் ராஜகோபால், 48. இவர் பாகூரில் கடந்த 30 ஆண்டுகளாக பாத்திரக்கடை நடத்தி வந்தார்.

கடையில் வியாபாரம் சரியாக போகாததால், சுமார் 25 லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ராஜகோபால், மன உலைச்சலில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன், கடையில் தண்டல் கட்ட வைத்திருந்த பணத்தை அவர் செலவு செய்து விட்டார்.

இது குறித்து நேற்று முன்தினம் அவரது மனைவி சிவகாமி, அவரிடம் கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு 7 மணியளவில் கடையில் இருந்து வெளியே சென்ற ராஜகோபால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், பல இடங்களில் தேடினர். இதனிடையே, இரவு 11 மணியளில், குடிபோதையில் வீட்டிற்கு வந்து, வாந்தி எடுத்தார். அவரிடம், விசாரித்தபோது, மதுவில், எலி மருந்து கலந்து குடித்து விட்டதாக கூறினார். அவரை, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது மனைவி சிவகாமி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us