ADDED : மே 08, 2026 05:51 PM

கோட்டக்குப்பம்: த.வெ.க., தலைவர் விஜயை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த கவர்னரை கண்டித்து கோட்டக்குப்பத்தில் த.வெ.க., வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆகியும். த.வெ.க.., தலைவர் விஜயை முதல்வராக பொறுப்பேற்க கவர்னர் மற்றம் ஒரு அரசியல் கட்சியினர் சூழ்ச்சி செய்வததாகக்கூறி நேற்று கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கபாலி தலைமையில் த.வெ.க.,வினர் திடீரென திரண்டனர்.
அங்கு, வாசலில் அமர்ந்து, சாகும் வரை உண்ணாவிரதம் என, அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் நேரில் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, காலை 9:00 மணிக்கு துவங்கிய போராட்டம், 1:00 மணிக்கு கைவிடப்பட்டது.

