/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்
/
கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்
ADDED : மே 09, 2026 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்: ராமநத்தத்தில் கவர்னரை கண்டித்து த.வெ.க.,வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
த.வெ.க., ஆட்சி அமைக்கும் விஷயத்தில் கவர்னரின் செயலை கண்டித்து, திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் த.வெ.க., ஒன்றிய செயலர் சீத்தாராமன் தலைமையிலான, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10:30 மணியளவில் ராமநத்தத்தில், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, த.வெ.க., வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

