திண்டிவனம் எம்.எல்.ஏ., அமைச்சர் 25 ஆண்டுகளுக்குப்பின் வாய்ப்பு
திண்டிவனம் எம்.எல்.ஏ., அமைச்சர் 25 ஆண்டுகளுக்குப்பின் வாய்ப்பு
ADDED : மே 22, 2026 07:24 PM
திண்டிவனம்: கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
திண்டிவனம் (தனி) சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், வி.சி., சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு, அ.தி.மு.க.,வேட்பாளரை விட 734 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2001 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சண்முகம். ஜெ., அமைச்சரவையில், வணிகவரித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். தற்போது சண்முகம் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சண்முகத்திற்கு பிறகு, திண்டிவனத்தில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அ.தி.முக., மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த யாருக்கும் கடந்த 25 ஆண்டுகளாக அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
திண்டிவனத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், மத்திய அமைச்சராக இருந்துள்ள நிலையில், 2001க்கு பிறகு தொடர்ந்து 25 ஆண்டுகளாக தமிழக அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்காத நிலையில், தி.மு.க.,கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.சி.,கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, த.வெ.க.,அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக (ஆதிதிராவிடர் நலத்துறை) நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
வி.சி.,கட்சி முதலில் த.வெ.க., பெரும்பான்மை இல்லாத நிலையில், வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறி, நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது. தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு, இரண்டு எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள வி.சி., தற்போது த.வெ.க.,அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
