தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துப்பாக்கி சுடுதல் போட்டி பரிசளிப்பு விழா

துப்பாக்கி சுடுதல் போட்டி பரிசளிப்பு விழா

துப்பாக்கி சுடுதல் போட்டி பரிசளிப்பு விழா


ADDED : ஜூன் 15, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: துப்பாக்கி சுடுதல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.

ரெட்டியார்பாளையம் வஜ்ரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு அகாடமி சார்பில், தென் மாநில வீரர்களுக்கான 6வது ஓபன் சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 8ம் தேதி துவங்கியது. போட்டியினை புதுச்சேரி என்.சி.சி., குருப் கமண்டார் கர்னல் அஷிஷ் திவாரி துவக்கி வைக்தார். அனைத்து வயதிற்கான இப்போட்டியில் கர்நாடாகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 700 வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

வெற்ற பெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பு விழா அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கி, வாழ்த்தினார். நிகழ்ச்சியில் இண்டர்நேஷனல் நடுவர்கள் ரகுநாத், விபண்டஸ், புதுச்சேரி துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் கோவிந்தராஜன், ரவிந்திரன், திருநாவுக்கரசு, கிஷோர் குமார், நரசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us