sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை

/

விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை

விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை

விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை


ADDED : மே 06, 2026 05:51 PM

Google News

ADDED : மே 06, 2026 05:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கைக்கிலப்பட்டில் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்ணாடிப்பட்டு தொகுதி, கைக்கிலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்பகுதியில் அரசு மூலம் விளையாட்டு மைதானம் ஏதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், அப்பகுதி இளைஞர்கள் வேறுவழியின்றி சங்கராபரணி ஆற்றின் படுகையணை பகுதிகளில்  தற்காலிகமாக விளையாட்டு  மைதானம் அமைத்து கிரிக்கெட் மற்றும் வாலிபால் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே, மழைக்காலங்களில் சங்கராபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக இளைஞர்கள் உருவாக்கும் மைதானம் முழுதும் தண்ணீர் தேங்கி, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடுகிறது. இதனால், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. 

எனவே, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் அரசு மூலம் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us