ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை குழு வழி அனுப்பும் நிகழ்ச்சி
ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை குழு வழி அனுப்பும் நிகழ்ச்சி
ADDED : மே 20, 2026 11:01 PM
புதுச்சேரி: புதுச்சேரி வந்த ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை குழுவிற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் 35வது நினைவு தினம் இன்று(21ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, ஆண்டுதோறும் கர்நாடக மாநில காங்., தொழிலாளர் பிரிவு சார்பில் ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை குழு நடந்து வருகிறது.
கடந்த 15ம் தேதி துவங்கிய நினைவு ஜோதி யாத்திரை குழு நேற்று முன்தினம் புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் அமைந்துள்ள ஐஸ்வர்யா கிராண்ட் ஹோட்டலுக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து, ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை குழு வழி அனுப்பும் நிகழ்ச்சி மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது.
இதில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், அனந்தராமன், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளர் விஜயலட்சுமி ஜெயமூர்தத்தி மற்றும் மாநில ஐ.என்.டி.யூ.சி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
