தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் மக்கள் மன்றம் 22 புகார்களுக்கு உடனடி தீர்வு 

புதுச்சேரியில் மக்கள் மன்றம் 22 புகார்களுக்கு உடனடி தீர்வு 

புதுச்சேரியில் மக்கள் மன்றம் 22 புகார்களுக்கு உடனடி தீர்வு 


ADDED : மே 30, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 22 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருபுவனை போலீஸ் ஸ்டேஷனில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்களுடன், பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் ரெட்டியார்பாளையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., ராஜேந்திர குமார் குப்தா, காரைக்காலில், எஸ்.பி., பழனிவேல், டவுன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., சுபம் சுந்தர் கோஷ், உருளையன்பேட்டையில், எஸ்.பி., ஸ்ருதி, கிருமாம்பாக்கத்தில், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், மாகியில் எஸ்.பி., வினய் குமார் கட்ஜ், மற்றும் ஏனாமிலும்  பொதுமக்களின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

நிகழ்ச்சியில் மொத்தமாக 27 பெண்கள் உட்பட 142 பேர் கலந்துகொண்டனர். அதில் 40 புகார்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு, 22 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us