தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விருத்தாசலம் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் குறித்து பிரேமலதா ஆய்வு

விருத்தாசலம் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் குறித்து பிரேமலதா ஆய்வு

விருத்தாசலம் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் குறித்து பிரேமலதா ஆய்வு


ADDED : மே 22, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் ஸ்டேண்டில் உள்ள அடிப்படை வசதிகளை எம்.எல்.ஏ., பிரேமலதா நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், பஸ் ஸ்டேண்டை விரிவுபடுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அதிகரிகளிடம் அறிவுறுத்துவதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து, எருமனுாரில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டார். அதில், மழையில் நனைந்த நெல் மூட்டைகளை காலியாக உள்ள குடோன்களில் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைக்க அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன்பின், செராமிக் கல்லுாரி, ஆலடி சாலையில் உள்ள ரேஷன் கடை, ரயில்வே ஜங்ஷன், மார்க்கெட் கமிட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, மார்க்கெட் கமிட்டியில் இருந்த விவசாயிகள், தங்களின் வேளாண் விளை பொருட்களுக்கு வியாபாரிகள் உரிய விலை வழங்குவதில்லை என குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த பிரமேலதா, சட்டசபையில் இதுசம்பந்தமாக பேசுவதாக உறுதியளித்தார். அதன்பின், ஆலடி சாலையில் உள்ள பள்ளி வசலுக்கு சென்று இஸ்லாமியர்களுக்கும், தொடர்ந்து, கம்மாபுரம் ஒன்றிய பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

அப்போது, மாவட்ட செயலர் சிவக்கொழுந்து, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நகர செயலர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலர் வேல்முருகன், பொருளாளர் ராஜீ, மாநில செயற்குழு ரமேஷ், நகர தலைவர் சங்கர், மாவட்ட பிரதிநிதி பாலா, இளைஞரணி சக்கரபாணி, பொறுபாளர்கள் மோகன், ஜானகிராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us