ஒரு செடி; ஒரு உறுதிமொழி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ஒரு செடி; ஒரு உறுதிமொழி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : மே 14, 2026 07:11 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பசுமைப் பூங்கா அமைக்கும் முயற்சியாக, ‘ஒரு செடி, ஒரு உறுதிமொழி’ இயக்கத்தின் மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். அரசின் வணிக வரித்துறைச் செயலர் சவுத்ரி முகமது யாசின், கலெக்டர் குலோத்துங்கன், போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங், அரசின் தலைமை வனப் பாதுகாவலர் அருள்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பசுமைப் பூங்கா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
என்.சி.சி., குழுத் தலைமையக கமாண்டண்ட் ஆஷிஷ் திவாரி, புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் கல்லுாரி மேம்பாட்டுச் சபையின் தலைவர் சுடலை முத்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் முத்து மீனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
