sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ேஹாம்ஸ்டேகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ேஹாம்ஸ்டேகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ேஹாம்ஸ்டேகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு


ADDED : மே 28, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 11:33 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பெட் அண்ட் பிரேக்பாஸ்ட், ேஹாம்ஸ்டேக்களை முறைப்படுத்தி, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தங்குமிடங்களையும் அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த 2019ம் ஆண்டு பெட் அண்ட் பிரேக்பாஸ்ட் மற்றும் ேஹாம் ஸ்டேகள் திட்டத்தை அமல்படுத்தியது. 

பெரிய ஹோட்டல்களைப் போலன்றி, பயணிகள் ஒரு சொந்த வீட்டில் தங்குவது போன்ற அனுபவத்தை ஏற்படுத்த இந்த ேஹாம்ஸ்டே ஓட்டல்கள்  ஊக்குவிக்கப்பட்டன. இந்த பெட் அண்ட் பிரேக்பாஸ்ட் மற்றும் ேஹாம்ஸ்டேகளை முறைப்படுத்தி அதற்கான வழிகாட்டுதல்களை சுற்றுலா துறை வெளியிட்டுள்ளது.

தரவரிசைப் பிரிவுகள்:: பெட் அண்ட் பிரேக்பாஸ்ட் மற்றும் ேஹாம்ஸ்டேகளில் உள்ள வசதிகள் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்படுகின்றன. முதன்மையாக உள்ள சில்வர் பிரிவில் மின்விசிறி, கட்டில், சுத்தமான படுக்கை விரிப்புகள், கழிப்பறை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை மற்றும் சுத்தமான வசதிகள் இருக்க வேண்டும்.

அடுத்ததாக உள்ள கோல்ட் பிரிவில் ஏ.சி., வைபை, வாகனம் நிறுத்துமிடம், நவீன உட்புற வடிவமைப்பு மற்றும் உள்ளூர் கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட கூடுதல் வசதிகள் இடம்பெற வேண்டும்.

மிக உயரிய பிரிவான கோல்ட் பிளஸ் அல்லது பிளாட்டினம் பிரிவில், கோல்ட் பிரிவின் வசதிகளுடன் சேர்த்து பாரம்பரிய உணவு, பாரம்பரியக் கட்டடம், மழைநீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகள் போன்றவை கட்டாயமாக இருக்க வேண்டும். இவைகளை தானாக முன்வந்து வீட்டின் உரிமையாளர்கள் அறிவிக்க வேண்டும். அரசு அமைக்கும் குழு இதனை ஆய்வு செய்து எந்த வகை என்று அறிவிக்கும்.

பெட் அண்ட் பிரேக்பாஸ்ட் கட்டணம்:: சில்வர் பிரிவில் ஆண்டு கட்டணமாக 12,000 ரூபாயும், அல்லது 5 ஆண்டுகளுக்கான ஒருமுறை கட்டணமாக 50,000 ரூபாயும் செலுத்த வேண்டும். கோல்ட் மற்றும் கோல்ட் பிளஸ் பிளாட்டினம் பிரிவில் ஆண்டு கட்டணமாக 25,000 ரூபாயும் அல்லது 5 ஆண்டுகளுக்கான ஒருமுறை கட்டணமாக 90,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

ேஹாம்ஸ்டே கட்டணம்:: சில்வர் பிரிவில் ஆண்டு கட்டணமாக 1,000 ரூபாயும், அல்லது 5 ஆண்டுகளுக்கான ஒருமுறை கட்டணமாக 25,00 ரூபாயும் செலுத்த வேண்டும். கோல்ட் மற்றும் கோல்ட் பிளஸ் பிளாட்டினம் பிரிவுகளில் ஆண்டு கட்டணமாக 12,000 ரூபாயும், அல்லது 5 ஆண்டுகளுக்கான ஒருமுறை கட்டணமாக 50,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

சுற்றுலாத் துறை நடத்தும் கண்காட்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு, சிறப்பு பயிற்சிகள் மற்றும் சுற்றுலாத் துறையின் இணையதளம் மற்றும் விளம்பரங்களில் ஹோம்ஸ்டே முகவரிகள் முன்னிலைப்படுத்தப்படும் போன்ற பல்வேறு ஊக்குவிப்புகளையும் அரசு வழங்க முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us