ADDED : ஜூன் 15, 2026 05:50 PM
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆனந்த், தென்னரசு ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தார்.
த.வெ.க., பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:40 மணிக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வந்தனர்.
முதலில் மூலவர் அம்மனை தரிசனம் செய்தனர். பின் உற்சவர் அம்மனையும், தியான மேடையில் அமர்ந்தும் வழிபட்டனர். இரவு 1:10 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டனர். அமைச்சர் தென்னரசு தனி காரில் சென்றார்.
கோவிலில் இருந்து சிறிது துாரம் நடந்து வந்த அமைச்சர் ஆனந்த் கூட்ட நெரிசல் இருந்ததால் தனது காரில் செல்லாமல் த.வெ.க., நிர்வாகி சிவக்குமாரின் ஸ்கூட்டரில் 5 கி.மீ., துாரம் சென்று அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை சென்றார்.
