ADDED : மே 28, 2026 06:29 PM
அ நிறம் | அளவு
வானுார்: மறுவாழ்வு மையத்தில் மனநலம் பாதித்த நபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, உருளையன்பேட்டையை சேர்ந்தவர் மலையன், 37; குடிப்பழக்கம் உள்ள அவர் சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை வானுார் அடுத்த மொரட்டாண்டியில் உள்ள குடிபோதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மறுவாழ்வு மையத்தில் உள்ள கழிவறையில் அவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், ஆரோவில் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
