எனக்கு எந்த பதவியும் வேண்டாம்: ஜோஸ் சார்லஸ் எம்.எல்.ஏ., பேட்டி
எனக்கு எந்த பதவியும் வேண்டாம்: ஜோஸ் சார்லஸ் எம்.எல்.ஏ., பேட்டி
UPDATED : மே 31, 2026 07:16 PM
ADDED : மே 31, 2026 07:10 PM

புதுச்சேரி: 'விரைவாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும்' என, ஜோஸ் சார்லஸ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம், அவர்களுக்கு இலாகா ஒதுக்குவது தாமதமாகிறது. இதனால் மக்கள் பாதிக்கின்றனர். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக ரூ.100 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்றும் சில சர்ச்சைகள் வெளியே வந்தது.
எனக்கு எந்த பதவியும் வேண்டாம். நான் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன். என்னால் தான் தாமதம் என்றால் என்னை விடுத்து விரைவாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்து, அனுபவம் இல்லாதவர்கள் கூட அவரவர் துறைகளுக்கு சென்று பணிகளை துவங்கி விட்டனர். ஆனால் பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்துடன் இருந்தும் அமைச்சவையை அமைக்க தாமதப்படுத்துவது மக்களுக்கு நல்லதல்ல.
அமைச்சர் நியமனம் இல்லாததால் சென்டாக் மாணவர் சேர்க்கையும் தாமதமாகும். எனவே விரைவாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.
புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறினேன். அதற்காக, சிங்கப்பூரில் இருந்து (1ம் தேதி) ஒரு குழுவினர் புதுச்சேரி, காரைக்கால் வந்து பார்வையிட உள்ளனர். சில டிசைன்ஸ் அவர்கள் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக பேச உள்ளோம்.
எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்திலும் எங்களின் கட்சியை துவங்கியுள்ளோம்' என்றார்
