தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 8 அடி நீள சாரை பாம்பு மீட்பு; வனத்துறை நடவடிக்கை

8 அடி நீள சாரை பாம்பு மீட்பு; வனத்துறை நடவடிக்கை

8 அடி நீள சாரை பாம்பு மீட்பு; வனத்துறை நடவடிக்கை


UPDATED : மே 16, 2026 08:03 PM

ADDED : மே 16, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2026 08:03 PM ADDED : மே 16, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் பகுதியில் பாம்பு ஒன்று அடிக்கடி சாலையை கடந்து சென்றது. அவ்வழியாக சென்றவர்கள் பல நாட்களாக பாம்பை பார்த்து அச்சத்துடன் சென்று வந்தனர்.

இந்நிலையில், தெப்பக்குளத்தில் உள்ள நீரை பாதுகாக்க குளத்தை சுற்றி மீன்பிடி வலை அமைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் உலவிய அந்த பாம்பு நேற்று காலை மீன் பிடி வலையில் சிக்கியது. அந்த பகுதியில் இருந்தவர்கள் மர குச்சியால், வலையில் சிக்கிய பாம்பை விலக்கி விட்டனர்.

வலையில் இருந்து தப்பிய பாம்பு தெப்பக்குளம் தண்ணீருக்குள் சென்றது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர்கள் வேலாயுதம், கோபி ஆகியோர், தண்ணீரில் இருந்து கரைக்கு வந்த பாம்பை பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்பு 8 நீளமுள்ள சாரை பாம்பு ஆகும். அதனை காப்பு காட்டில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us