இந்திரா சதுக்கம் – மூலக்குளம் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்திரா சதுக்கம் – மூலக்குளம் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 16, 2026 07:15 PM

புதுச்சேரி: இந்திரா சதுக்கம் – மூலக்குளம் வரை வில்லியனுார் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் விளம்பர பேனர்களை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகளை கடந்த 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பல்வேறு துறைகள் இணைந்து அகற்ற கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று (16ம் தேதி) இந்திரா சதுக்கம் – மூலக்குளம் சாலை வரையிலான வில்லியனுார் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள், பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு, உழவர்கரை நகராட்சி, போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் முதற்கட்டமாக சாலையின் இடது புறத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், சிமென்ட் சிலாப்கள், பெயர் பலகைகள், விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.
