தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சேவை வரி வசூல் செய்ய மின்னணுஏல விண்ணப்பங்கள் வரவேற்பு

சேவை வரி வசூல் செய்ய மின்னணுஏல விண்ணப்பங்கள் வரவேற்பு

சேவை வரி வசூல் செய்ய மின்னணுஏல விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 02, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: நகராட்சியில் சேவை வரி வசூல் செய்ய மின்னணு ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி நகராட்சியில் பல்வேறு வகையான பயன்பாட்டு சேவை வரி வசூல் செய்ய மின்னணு ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதற்கான உரிமம். பஸ் நிலையம், பழைய சிறைச் சாலை வளாக வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டணம் வசூல், நகராட்சி பகுதிகளில் அடிக்காசு வசூல்,புதிய பஸ் நிலையம், கடற்கரை சாலையில் உள்ள சிறுவர் பூங்கா, மேரி ஹால் வடக்கு பகுதி, பழைய சாராய வடி ஆலை, நெல்லு மண்டி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், முத்தியால்பேட்டை மார்க்கெட், சுப்பையா சாலை, உழவர் சந்தை, பழைய பஸ் நிலை கழிப்பறை ஆகிய பகுதிகளுக்கு சேவை வரி வசூல் செய்ய விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தை இன்று (4ம் தேதி) முதல் வரும் 12ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, மாலை 3:00 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். ஏல முன் வைப்பு தொகை வரும் 12ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மின்னணு ஏலம் வரும் 22ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். ஏல வழிமுறைகள் பங்கேற்பவருக்கு தலைமை செயலகம் 3வது தளம் அரங்கில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்பவர்கள் குறைந்தபட்ச ஏலத்தொகை விண்ணப்பத்தை www.eaucton.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்து, விண்ணப்ப படிவ ஒப்புதல் இணைத்து எச்.எம்., காசிம் சாலையில் உள்ள நகராட்சி வருவாய் பிரிவு 2, அலுவலகத்தில் வரும் 12ம் தேதி மாலை 3:30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us