தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலுார் மாவட்டம் பின்தங்கியது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலுார் மாவட்டம் பின்தங்கியது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலுார் மாவட்டம் பின்தங்கியது


ADDED : மே 20, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டம், 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 94.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 21வது இடத்திற்கு பின் தங்கியது.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 11ம் தேதி துவங்கி, ஏப். 6 வரை நடந்தது. கடலுார் மாவட்டத்தில் 439 பள்ளிகளில் இருந்து 17,214 மாணவர்கள், 15,386 மாணவிகள் உட்பட 32,600 பேர் எழுதினர். அதையடுத்து நேற்று 10ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியானது. இதில், மாவட்டத்தில் 15,865 மாணவர்கள்,  14,852 மாணவிகள் உட்பட மொத்தம் 30,717 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 94.22 ஆகும். இதில், மாணவர்கள் 92.16, மாணவிகள் 96.53 தேர்ச்சி சதவீதம் ஆகும்.

மாவட்டத்தில், 10 ம்வகுப்பு தேர்ச்சி சதவீதம் 2023–24ம் ஆண்டில் 92.63 சதவீதமாகவும், கடந்த ஆண்டு 1.88 சதவீதம் அதிகரித்து 94.51 ஆகவும் இருந்தது.

நடப்பாண்டில் 0.29 சதவீதம் குறைந்துள்ளது. மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் கடலுார் மாவட்டம் 2023–24ம் ஆண்டில் 19வது இடமும், கடந்த ஆண்டில், 20வது இடமும் பெற்றிருந்த நிலையில் நடப்பாண்டில் மேலும் ஒரு இடம் பின்தங்கி 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்திலும் 2023–24ம் ஆண்டில் 91.51 சதவீதத்துடன் 11வது இடமும், கடந்த ஆண்டு 93.79 சதவீதத்துடன் 14வது இடமும் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 93.19 சதவீதத்துடன் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 439 பள்ளிகளில் 204 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 86 அரசுப்பள்ளிகள், 8 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 110 தனியார் பள்ளிகள் அடங்கும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us