ADDED : மே 07, 2026 11:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
ஆணையத்தின் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், துணை இயக்குநர் அனந்தலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதுச்சேரியில் உள்ள நகர்புற மற்றும் கிராமப் புறங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்குவது குறித்தும், அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, விநியோக முறை மற்றும் கண்காணிப்பு நெறிமுறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பள்ளி குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த சுகாதாரத்துறைக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
