ADDED : மே 31, 2026 11:02 PM
புதுச்சேரி: வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி காந்தி வீதி, பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் 40ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக, கடந்த 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு துவஜா அவரோகணம், கடப்ரோஷ்ணம் சாற்றுமுறை நடந்தது.
இன்று (1ம் தேதி) காலை 10:00 மணிக்கு 108 கலச திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சந்திரபிரபையில் சுவாமி வீதிவுலா நடக்கிறது.
