நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏம்பலம் அருகே சாராயக்கடை கேஷியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏம்பலம் அடுத்த புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45; வில்லியனுார் பகுதியில் உள்ள சாராயக்கடையில் கேஷியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் வீட்டு பாத்ரூமில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி நதியா புகாரின் பேரில், கரிக்காலம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

