தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலையில் ரத்த தான முகாம்

புதுச்சேரி பல்கலையில் ரத்த தான முகாம்

புதுச்சேரி பல்கலையில் ரத்த தான முகாம்


ADDED : ஜூன் 15, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உலக ரத்த தானம் தினத்தை முன்னிட்டு, மாணவர் நல டீன் அலுவலகம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., தோட்டக்கலை பிரிவு, மத்திய நுாலகம், ஐ.க்யூ.ஏ.சி., மற்றும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.

பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, ரத்த தான முகாமை துவக்கி வைதத்தார். மாணவர் நல பேராசிரியர் வெங்கட ராவ் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார், ஜிப்மர் தலைமை மருத்துவ அதிகாரி வடிவேல், ரத்த தானம் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களை முன்வைத்தனர். 

டாக்டர் அன்விதா முதிராஜ் பிரகாஷ் பாபு, ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முகாமில், பேராசிரியர்கள் தரணிக்கரசு, நடராஜன், டீன்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கடலோர காவல்படையினர் உட்பட பலர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

இணை பேராசிரியர் ரஜனீஷ் அனுபம் நன்றி கூறினார். முகாமில், 32 யூனிட் ரத்த தானம் பெறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us