அ.தி.மு.க, எம்.எல்.ஏ., பெயர் அழிப்பு பண்ருட்டி அருகே பரபரப்பு
அ.தி.மு.க, எம்.எல்.ஏ., பெயர் அழிப்பு பண்ருட்டி அருகே பரபரப்பு
ADDED : மே 14, 2026 07:41 PM
பண்ருட்டி: அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., அணி மாறியதை கண்டித்து அக்கட்சியினர் சுவர் விளம்பரத்தில் அவரது பெயரை அழித்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மோகன் வெற்றி பெற்றார். அவர் நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக முதல்வர் விஜய் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, சண்முகம் அணி சார்பில் ஒட்டெடுப்பில் வாக்களித்தார்.
இந்நிலைலில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவை மீறி அவர் வாக்களித்ததால், கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் உட்பட, தமிழகத்தில் 26 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதையடுத்து அண்ணாகிராமம் ஒன்றியம், பூண்டி ஊராட்சி குச்சிபாளையம் கிளை செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பெண்கள், மோகனுக்காக எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தில் உள்ள அவர் பெயரை அழித்தனர். தொடர்ந்து, பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
