தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 59ம் ஆண்டு கம்பன் விழா நிறைவு

59ம் ஆண்டு கம்பன் விழா நிறைவு

59ம் ஆண்டு கம்பன் விழா நிறைவு


ADDED : மே 10, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்த 59ம் ஆண்டு கம்பன் விழா நேற்று நிறைவு பெற்றது.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், 59ம் ஆண்டு கம்பன் விழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடந்த விழா நேற்று நிறைவடைந்தது.

விழாவின், நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு ‘கம்பனில் நான் கண்ட’ என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் நடந்தது. இதில் இலங்கை ஜெயராஜ் தலைமை தாங்கினார்.  காலை 11 மணிக்கு அறக்கட்டளை நிறுவனர் நாகராஜ் தலைமையில், நீதிபதி சுரேஷ்குமார் ‘தாழ்ந்தோர் உயர்வர்’ என்ற தலைப்பில் தனியுரை, மாலை 4:30 மணிக்கு இளம்பிறை மணிமாறணின் ‘காரணமும் காரியமும்’ என்ற தலைப்பில் தனியுரை நடந்தது.

மாலை 6 மணிக்கு நீதிபதி ராமசுப்ரமணியன், ராமலிங்கம், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் முதல் நாள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு நடந்தது. இதில் நோக்கர்கள் சார்பில் விஜய கிருஷ்ணன், சாடயுவின் சார்பில் தேவி குணசேகரன், திரிசடையின் சார்பில் புதுகை பாரதி, தாரையின் சார்பில் ஸ்ரீ பிரசாந்தன், பதிவாளராக ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.   

தொடர்ந்து விழாவில், கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கம்பன் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us