தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ மூன்று தொகுதிகளிலும் சிக்கல்; தேறுவாரா அமைச்சர் மகேஷ்?

 மூன்று தொகுதிகளிலும் சிக்கல்; தேறுவாரா அமைச்சர் மகேஷ்?

 மூன்று தொகுதிகளிலும் சிக்கல்; தேறுவாரா அமைச்சர் மகேஷ்?


ADDED : ஏப் 02, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமைச்சர் மகேஷ் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுவதால், அவற்றில் தி.மு.க.,வின் வெற்றி சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக, அமைச்சர் மகேஷ் உள்ளார். இவரது கட்டுப்பாட்டில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன.

* திருச்சி கிழக்கில் தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில்தான், த.வெ.க., தலைவர் விஜயும் போட்டியிடுவதால், தி.மு.க., வெற்றி பெற கடுமையாக போராடும் சூழல் உள்ளது

* அமைச்சர் மகேஷ் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர். இங்கு, த.வெ.க., சார்பில், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் நவல்பட்டு விஜி, அ.தி.மு.க., சார்பில், மா.செ., குமார் போட்டியிடுகின்றனர். நவல்பட்டு விஜி தான் வேட்பாளர் என அறிவிக்கும் முன்பு வரை, மகேஷ் வெற்றி உறுதி என்ற தோற்றம் நிலவியது. இப்போது விஜி போட்டியிடுவதால் அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது

* மணப்பாறையில், சிட்டிங் எம்.எல்.ஏ., அப்துல் சமது போட்டியிடுகிறார். இவரது மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளது. நான்காவது முறையாக இத்தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி விட்டதால் உள்ளூர் தி.மு.க.,வினர் கடும் சோர்வில் உள்ளனர், அப்துல் சமதுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம். மேலும், இத்தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் டாக்டர் விஜயகுமார், த.வெ.க., சார்பில் கதிரவன் போட்டியிடுவதால், களம் மேலும் நெருக்கடி ஆகியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலால், அமைச்சர் மகேஷ் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று தொகுதிகளையும் தி.மு.க., மீண்டும் கைப்பற்றுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us