பழனிசாமியின் திண்டுக்கல் பேச்சு; தலித் தலைவர்கள் கடும் கோபம்
பழனிசாமியின் திண்டுக்கல் பேச்சு; தலித் தலைவர்கள் கடும் கோபம்
ADDED : செப் 09, 2025 05:27 AM

மதுரை : திண்டுக்கல்லில் நேற்றுமுன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்; அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்' என வாக்குறுதி அளித்தார்.
இதற்கு தமிழக மக்கள் முன்னே ற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல, தே வேந்திர இனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், 'செப்., 11ல் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க., தரப்பில் யாரும் வரக்கூடாது' என தேவேந்திர பண்பாட்டுக்கழகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் கடும் நெரு க்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, பா.ஜ., - அ.தி. மு.க., கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வமும், தினகரனும் வெளியேறி உள்ள நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர், அ.தி.மு.க., தலைமை மீது கோபம் அடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அவ்விரு கட்சிகளும், விஜய் தலைமையில் அமையும் கூட்டணியில் இணைந்து, வரும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளலாமா என யோசிக்கின்றன.