ADDED : மே 23, 2026 08:27 AM

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஷாஜஹான், துவா ஓதி, தன் பணிகளை தொடங்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜஹானுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றார். அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு, அரசு காரில் வந்தார். அமைச்சருடன் அவரது குடும்பத்தினர், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி உள்ளிட்டோர் வந்தனர்.
அமைச்சர், தன் இருக்கையில் அமர்வதற்கு முன், இஸ்லாமிய குருமார், துவா ஓதினர். அதன்பின் அமைச்சர் தன் இருக்கையில் அமர்ந்து, பணிகளை தொடங்கினார்.
இதேபோல், சமூக நீதித் துறை அமைச்சராக பதவியேற்ற, வி.சி.க.,வை சேர்ந்த வன்னி அரசு, தலைமைச் செயலகத்தில், தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு, வி.சி.க., தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளுடன் வந்தார்.
அவருக்கு திருமாவளவன் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து, அவரை அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.
